டிரேடிங் – அறிமுகம்
டிரேடிங் என்றால் என்ன? தமிழில் வர்த்தகம், வணிகம், வாணிபம், வியாபாரம் என்று சொல்லுவீர்கள். வர்த்தகம் என்றால் என்ன.
வர்த்தகம் என்றால் பொருள்களை வாங்கி விற்பது. அதாவது மொத்த விலைக் கடைகளில் வாங்கி நாம் சில்லறை விலைக்கு விற்பது வர்த்தகமாகும். நாம் அதிகப்படியான எண்ணிக்கையில் பொருள்களை வாங்கினால் நமக்கு விலை குறைவாகக் கிடைக்கும். அதை நமது வாடிக்கையாளர்களுக்கு சில்லைறை விலையில் விற்கும் போது நம்மால் லாபம் பார்க்க முடியும்.
சில்லறை விலை என்பது மொத்த விலையை விட அதிகமாக இருக்கும். ஏனென்றால் பொருள்களை கடத்துவதற்கான போக்குவரத்து செலவு, பொருள்களை இருப்பு வைத்து பாதுகாப்பதற்கான செலவு மற்றும் சில்லைறை விற்பனையாளரின் லாபம் அனைத்தையும் சேர்க்கும் பொது சில்லறை விலை என்பது அதிகமாக இருக்கும்.
இந்த வகையான வர்த்தகத்தில் நாம் நமது லாப விகிதத்தை நிர்ணயிக்க முடியும். அதாவது செலவுகள் போக நமக்கும் கணிசமான லாபம் வருமளவிற்கு விலையை நிர்ணயிக்க முடியும். விலை நிர்ணயத்தில் நமது போட்டியாளர்கள், வர்த்தகம் செய்யும் இடம், வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டம் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருக்கும்.
ஆக, நம்மால் குறைந்த விலையில் பொருள் கிடைக்குமிடம் தெரிந்து, சரியான இடத்தில் நமது வியாபாரம் சரியான முறையில் நடந்தால் நாம் லாபம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, இத்தகைய வழக்கமான வர்த்தகத்தில் வெற்றி பெற குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பெறலாம்.
வழக்கமான வர்த்தகத்தில் நாம் வாங்கும் போது முழு பணத்தையும் கொடுக்க வேண்டி இருக்கும். அதே போல் விற்கும் போதும் முழு பணத்தையும் வாங்கி விட்டு தான் விற்போம். இங்கு அனைத்து வர்த்தகமும் கையில காசு வாயில தோசை என்ற அடிப்படையில்தான் நடைபெறுகிறது.
வழக்கமான வர்த்தகத்தை நாம் கேஷ் மார்க்கெட் அல்லது ஸ்பாட் மார்க்கெட் என்று கூறலாம்.
இறுதியாக, வழக்காமன வர்த்தகத்தில் நாம் முழு பணத்தை செலுத்தி பொருள்களை குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்க வேண்டும். இங்கே நாம் வாங்கி மட்டுமே விற்கிறோம். பணத்தை கொடுத்து பொருள்களை வாங்குகிறோம், பணத்தை வாங்கி விட்டு பொருள்களை விற்கிறோம். இது வாங்கி விற்பதால் ஒரு வழிப் பாதை. ஒரு வழிப் பாதையில் பயணிக்கும் போது இலக்கை அடைவது சுலபம்.
ஆனால், இருவழிப்பாதையில் பயணிக்கும் சூழ்நிலை வரும் போது?
அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
குறிப்பு: எழுத்து வடிவில் புரிய வைக்க முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிரவும். நன்றி.
தமிழ் பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது அண்ணா.. நன்றி. தங்கள் சேவை தொடர வேண்டுகிறோம். அடுத்த பதிவு எப்போது அண்ணா?
கண்டிப்பாக சேவை தொடரும்.. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி…
Nice intro. good start for interested beginners.
thank u very much…
Beginners those who are interested in trading can join and its explained in Tamil which is very easy to understand. Keep it up.
thanks for your feedback sir…
Good intro, and beginners and very useful msg
thanks sir…
Super Bro , very nice , neenga romba basic la irundhu solringa so beginners Ku romba usefulla ah irukum aana konjam short ah iruku next time la irundhu konjam neraya write pannunga but Tamil la neenga dha ipadi solli tharinga pls continue ur teaching bro ,once again thank you bro .
mikka nanri… naan thodarnthu ennaal mudintha pathivukalai pakirven…
Beginners க்கு (குறிப்பா என்னைய போல இருக்கவங்களுக்கு ) இந்த மாதிரி சொல்றது கொஞ்சம் ஈஸியா understand ஆகும்.. Great work sir.. 👌…….waiting for your next article.. 👍.
thanks sir… i will update regularly…
Very useful for beginers
thank u very much…